நமது தமிழ்ச்சங்கம் சுமார் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தமிழ் சார்ந்த விழாக்களை நடத்தி வருகிறது. அவையாவன:

  • பொங்கல் விழா (Pongal Vizha)
  • சித்திரை & தமிழ்ப் புத்தாண்டு விழா (Chithirai and Tamil New Year Vizha)
  • முத்தமிழ் விழா (Muthamizh Vizha)
  • குழந்தைகள் தின விழா (Children’s Day Vizha)

இது தவிர தமிழிசை நிகழ்ச்சி மற்றும் தமிழறிஞர்கள், கலைஞர்கள் வரும்போது அவர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சிகளையும் நமது சங்கம் நடத்திவருகிறது. இந்த விழாக்களில் இடம்பெறும் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், விருந்தினர் உரையாடல்கள், பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சி போன்றவற்றில் நீங்களும், உங்கள் பிள்ளைகளும், நண்பர்களும் தவறாமல் பங்கெடுத்துக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.